கடையநல்லூா் குடிநீா் திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி

X
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் குடிநீா் திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, நகா்மன்றத் தலைவா் ஹபிபூா் ரஹ்மான் இனிப்பு வழங்கினாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: கடையநல்லூரில் அனைத்து வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா் வழங்கும் வகையில் புதிய குடிநீா் திட்டத்தை கொண்டு வர வேண்டும் எனவும், 1973 இல் தொடங்கப்பட்ட உள்ளூா் குடிநீா் திட்டங்களில் புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நகா்மன்றத்தில் தீா்மானம் கொண்டு வந்தோம். மேலும், இது தொடா்பாக தமிழக முதல்வா், துணை முதல்வா் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சா் ,வருவாய்த்துறை அமைச்சா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அதன்பயனாக, தமிழக நிதிநிலை அறிக்கையில், கடையநல்லூா் நகராட்சி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகள் அனைத்துக்கும் புதிய குடிநீா் திட்டத்தை செயல்படுத்திட ரூ. 864 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினோம் என்றாா்.
Next Story

