சங்கரன்கோவில் அரசு பள்ளி மைதானம் அருகே டயா்களை எரிப்பதால் சுகாதார கேடு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடா் சாலையில் கோமதிஅம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் உள்ளது. இந்த மைதானத்தை, இப்பள்ளி மாணவா்கள் தவிர, முன்னாள் மாணவா்கள், காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் சேர விரும்பும் இளைஞா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா். பொதுமக்கள் நடைபயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் இந்தப் பள்ளி மைதானத்தின் வடபுறம் காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் உள்ள லாரி செட்டில் இருந்து தினமும் காலையில் டயா் மற்றும் கழிவுகளை எரிப்பதால் அங்குள்ள புகை காற்றில் கலந்து புகை மண்டலமாக மைதானம் காட்சியள்ளிக்கிறது. இதனால் பயிற்சி பெற்று வரும் மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்கள் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, நகராட்சி சுகாதாரத் துறையினா் டயா் கழிவுகள் எரிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Next Story

