லேப் டெக்னீசியன் கிரிக்கெட் போட்டியில் சேலம் அணிக்கு பரிசு

லேப் டெக்னீசியன் கிரிக்கெட் போட்டியில் சேலம் அணிக்கு பரிசு
X
கிரிக்கெட் சங்க செயலாளர் பரிசு வழங்கினார்
பாரா மெடிக்கல் நலச்சங்கம் சார்பில் லேப் டெக்னீசியன் தினவிழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடந்தது. கைப்பந்து சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார், ஆலோசகர் விஜயராஜ், என்.ஏ.பி.எல். இயக்குனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் 500 லேப் டெக்னீசியன்களுக்கு டீ-சர்ட் வழங்கி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியில் பல்வேறு மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் சேலம் மாவட்ட அணி வெற்றி பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சேலம் கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் பாபுகுமார், மூளை மற்றும் நரம்பியல் மருத்துவமனை இயக்குனர் திருவருட்செல்வன் ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையை வழங்கினர். இதில் பாரா மெடிக்கல் லேப் டெக்னீசியன் சங்க மாநில தலைவர் துரைசாமி, பொதுச் செயலாளர் விஜயகுமார், அகில இந்திய தலைவர் காளிதாசன், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story