சேலம் அம்மாபேட்டை மண்டலத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

X
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 9-வது வார்டுக்கு உட்பட்ட வீராணம் வள்ளுவர் காலனியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் புதிதாக கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம் அருகில் காலியாக உள்ள இடத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து அம்மாபேட்டை மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டனர். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கவுன்சிலர் பச்சியம்மாள் உள்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story

