சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில்

X
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட சூரமங்கலம் பகுதி அ.தி.மு.க. சார்பில் ்எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சூரமங்கலம் உழவர் சந்தை, ஜங்ஷன் பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை அமைப்பு செயலாளர் சிங்காரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் வினியோகம் செய்ததுடன் திண்ணை பிரசாரத்திலும் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் எம்.கே.செல்வராஜ், ஏ.கே.எஸ்.எம்.பாலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன், சக்திவேல், பகுதி செயலாளர் அசோக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

