திம்பம் மலைப்பாதையில் இரு அரசு பஸ்கள் மோதல்
திம்பம் மலைப்பாதையில் இரு அரசு பஸ்கள் மோதல் கோவையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு, தமிழக அரசு பஸ், 80 பயணி களுடன் நேற்று புறப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை வழி யாக, 2:00 மணிக்கு சென்றது. அதேசமயம் எதிரே மைசூருவில் இருந்து திண்டுக்கல் லுக்கு, கர்நாடகா மாநில அரசு பஸ், 80 பயணிகளுடன் வந்தது. மலைப்பாதையின், 23வது கொண்டை ஊசி வளைவில் எதிரெதிரே வந்தபோது எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் இரு பஸ்களும் மோதிக்கொண்டன. இதில் பயணிகள் காயம் அடையவில்லை. அதேசமயம் மலைப் பாதையில், 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story



