சாதி மோதலை தடுக்க வேண்டும் : அரசுக்கு திருமா வலியுறுத்தல்

சாதி மோதலை தடுக்க வேண்டும் : அரசுக்கு திருமா வலியுறுத்தல்
X
பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்த வேண்டும்” என்று தமிழக அரசுக்கு திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தங்க கணேஷ் மகன் தேவேந்திர ராஜ். இவர் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளிக்கு தேர்வு எழுத பஸ்சில் வந்தபோது மர்ம நபர்கள் சிலர் பஸ்சை வழிமறித்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தேவேந்திர ராஜ் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மயில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று மாலை நேரில் சந்தித்தார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். ம டீன் ரேவதி மற்றும் டாக்டர்கள் குழுவினரை சந்தித்து சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் அருகே சாதி வெறியர்களால் பிளஸ்-1 மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர். மாணவர் கபடியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கொண்டாடியதை பொறுத்துக் கொள்ள முடியாத கும்பல் கொலை வெறி செயலில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இதற்கு பின்னணியில் பலர் உள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மாணவர் படிப்புக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும். அந்த மாணவர் இருந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாதியின் பெயரால் வன்முறைகள் நடந்து வருகிறது. இதை தடுக்க மற்றும் கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் நடந்ததாக கூறுவது யாரை பாதுகாக்க நடக்கும் முயற்சி என்பது தெரியவில்லை. காவல்துறை இப்படி சொன்னதன் நோக்கமும் தெரியவில்லை. கபடி போட்டியால் ஏற்பட்ட முன்விரோதத்தை ஏன் மூடி மறைக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. என்ற பாகுபாடு இல்லாமல் எந்த ஆட்சி இருந்தாலும் சாதிய வெறியர்களின் பிரச்சினைகள் இருந்து தான் வருகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியிலான மோதலை தடுக்க நீதிபதி சந்துரு கொடுத்த பரிந்துரை அறிக்கையை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story