ஆட்டோ ஓட்டுனரிடம் செல்போன் திருடிய இருவர் கைது

X

கைது
தேனி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருபவர் ரகுநாதன். நேற்று (மார்.14) இவரிடம் ஆட்டோ சவாரி செல்ல வேண்டும் என கூறி சந்தானம், நூர் முகமது ஆகியோர் விசாரித்துள்ளனர். அப்பொழுது ரகுநாதன் அசந்த நேரத்தில் ஆட்டோவில் இருந்த அவரது செல்போனை இருவரும் திருடி சென்ற நிலையில் அப்பகுதியினர் அவர்களை மடக்கி பிடித்தனர். தேனி போலீசார் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Next Story