அரசு குளத்தை பாதுகாக்க விஎச்பி கலெக்டரிடம் மனு 

அரசு குளத்தை பாதுகாக்க விஎச்பி கலெக்டரிடம் மனு 
X
நாகர்கோவில்
நாகர்கோவில் விசுவ ஹிந்து பரிசத் மாநகர தலைவர் நாஞ்சில்ராஜா தலைமையில் குமரி மாவட்ட  கலெக்டரிடம் நேற்று  மனு கொடுக்கப்பட்டது.      அந்த மனுவில் வடசேரி வடக்குகிராமம் புது சர்வே எண் E 11/2-2 சுமார் இரண்டு ஏக்கர் ரூபாய் 500 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான பெருமாள் குளத்தை சிஎஸ்ஐ நிர்வாகத்திற்கு கொடுக்க முயற்சி செய்வதாக தெரிய வருகிறது. ரூ. 500கோடி ரூபாய் மதிப்பிலான பெருமாள் குளத்தை தனியாருக்கு தாரைவாக்க கூடாது. அந்த இடத்தில் இது அரசுக்கு சொந்தமான இடம்.  அத்துமீறி யாரும் நுழைய கூடாது என்று அறிவிப்பு பலகை உடனடியாக வைக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நாகராஜன்,  பிஜேபி வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த், விசுவ ஹிந்து பரிஷத் நகரச் செயலாளர்  ரமேஷ், தர்ம பிரச்சார் மாநகர தலைவர் ராஜு  ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story