கோவை: தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் !

கோவை: தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் !
X
நீலாம்பூர் பகுதியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்.
கோவை, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலாம்பூர் ராம்தேவ் தாபா முன்பு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜேம்ஸ் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ராம்தேவ் தாபா முன்பு உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்ததில், சுமார் 1 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுபோன்று தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story