திருச்செங்கோட்டில் திடீர் சாலை மறியல் பரபரப்பு

திருச்செங்கோடு நகராட்சி 1, 7, 8, 10,ஆகிய வார்டு பகுதிகளில் இருந்து சூரியம்பாளையம் பகுதி வழியாக மழை நீர்மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய நீர் செல்ல அனுமதிக்க முடியாது என பகுதி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் செய்த நிலையில் பத்தாவது வார்டு முனியப்பன் கோவில் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் மழை நீர் வடிகாலில் மூன்று இடங்களில் மண் கொட்டி அடைத்ததால் பரபரப்பு. 1வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், 7வது வார்டுநகர் மன்ற உறுப்பினர் தமிழரசி, 8வது வார்டுநகர் மன்ற உறுப்பினர் தினேஷ்குமார்,10 வது வார்டுநகர் மன்றஉறுப்பினர் ராஜவேல் என 4 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நகர்மன்ற தலைவர்நளினி சுரேஷ்பாபு மற்றும் நகராட்சி ஆணையாளர் அருள் ஆகியோரை சந்தித்து மண்ணை உடனடியாக அகற்றி தர வலியுறுத்தினார்கள். ஏற்கனவே சூரியம்பாளையம் பகுதிக்குள் தண்ணீர் நுழையாமல் அடைக்கப் பட்டிருக்கிற பகுதியில் இன்னும் கூட மண்ணைக் கொட்டி அடைத்து கொள்ளட்டும். எங்களது வார்டு பகுதியில்உள்ள மழைநீர் வடிகாலில் மண்ணைக் கொட்டி அடைக்கக் கூடாது. அதனை நகராட்சி நிர்வாகம் அகற்றி தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்கள். பொதுமக்கள் புகாரை அடுத்து மாலை சுமார் ஆறு மணிக்கு மண்ணை அகற்ற சென்ற நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகளைமர்ம நபர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணை அகற்றினால் கையை வெட்டி விடுவேன் என மிரட்டியதால்பதட்டமான சூழ்நிலை உருவானது. இதனை எடுத்து நான்கு வார்டுகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்களையும் தரக் குறைவாக, தகாத வார்த்தைகளில் பேசிய மர்ம நபர்கள் மீண்டும் மழைநீர் வடிகாலில் மண்ணைக் கொட்டியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க வேண்டிய காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதால் சட்ட ஒழுங்கு சீர்குலையும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட நாலு வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்செங்கோடு சங்ககிரி ரோடு தொண்டிக்காடு சந்திக்கும் இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக மண்ணை அகற்றி தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட பகுதி நேரில் சென்று பார்வையிட்டு அமைதி பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என கூறினார்.மேலும் நகராட்சி அதிகாரி காலையில் மிரட்டியவர்கள் மீது புகார் கொடுக்கலாம் எனகூறினார். இதனை அடுத்து சாலை மறியலை கைவிட்ட பொதுமக்கள் அடாவடியாக மண்ணை அகற்ற மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை எங்களை சமாதானப்படுத்த முயல்வதும் மெத்தன போக்கில் நடந்து கொள்வதும் அசம்பாவிதத்தை உருவாக்கும் ஏதாவது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் சூழல் உருவாகும். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களது பகுதியில் மழைநீர் வடிகாலில் இருந்து மண்ணை அகற்றி தர வேண்டும் எனநகர் மன்ற உறுப்பினர்கள் 10 வது வார்டு அதிமுக உறுப்பினர் ராஜவேல், எட்டாவது வார்டு பாஜக உறுப்பினர் தினேஷ்குமார், 1வது வார்டுதிமுக உறுப்பினர் மாதேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
Next Story

