தென்காசியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசியில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
X
குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் "கவனம் சார்ந்த வட்டாரங்கள் வளர்ச்சி திட்டத்தின்" கீழ் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் சர்வதேச மகளிர் தினம் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமை தாங்கினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. இராணி ஸ்ரீ குமார் முன்னிலை வகித்தார். குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலர்களில் சிறப்பாக பணியாற்றும் பெண் பணியாளர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன
Next Story