தென்காசியில் குழந்தை திருமண தடுப்பு பேரணி நடைபெற்றது

X
தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்காசியில் குழந்தை திருமணத் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. இராணி ஸ்ரீ குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்றது. இந்த பேரணியில் திரளானோர் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story

