குளித்தலையில் உலக மகளிர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
கரூர் மாவட்டம் குளித்தலை கிராமிய நிறுவனம், ஹெல்ப் டிரஸ்ட், லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கிராமியம் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு நல்லாசிரியர் லில்லி சகாயம் மேரி தலைமை வகித்தார். கிராமியம் திட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பலதா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, ரூ.30 லட்சம் கடனுதவி பெற தகுதியான சிறந்த சுய உதவி குழுவினருக்கு விருது வழங்கி பாராட்டி பேசினார். மகளிர் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ சுதா, தலைமை காவலர் பிரியா, அரசு மருத்துவமனை ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து பேசினர். விழாவில் கிராமியம் இயக்குனர் டாக்டர் நாராயணன், குளோபல் சமூக பாதுகாப்பு இயக்க தலைவர் சொக்கலிங்கம், ஹெல்ப் டிரஸ்ட் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராஜன், லயன்ஸ் சங்கத் தலைவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை கவிஞர் முகன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, கோபால், லேகா, மலையப்பன், குமார், இளஞ்சியம், நாகேஸ்வரி மற்றும் முசிறி எம்ஐடி வேளாண் கல்லூரி மாணவிகள், திருச்சி நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்டப் பணிகள் ஆனைக்குழு கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
Next Story