ஆரல்வாய்மொழியில் பைக் மீது வாகன மோதி தொழிலாளி பலி

ஆரல்வாய்மொழியில் பைக் மீது வாகன மோதி தொழிலாளி பலி
X
மற்றொருவர் படுகாயம்
குமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு மரக் கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (27) அம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த வினோத் (27) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள்  நேற்று இரவு ஒரு பைக்கில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர். கரையான் குழி  என்ற பகுதியில் வந்த போது நாகர்கோவில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி சென்ற வாகனம் ஒன்று பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.       இந்த விபத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ராஜேஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வினோத் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வினோத்தை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.        இதை அடுத்து போலீசார் ராஜேஷ் கண்ணன் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு  மலர்களை ஏற்றி வந்த வாகனம் பைக்கில் மோதியது  தெரிய வந்தது. அந்த வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story