அருமனை :  டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்

அருமனை :  டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்
X
வி சி க கோரிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாவட்ட செயலாளர் அல்காலித் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: -        அருமனை பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையானது அருமனை சந்திப்பு பகுதியில் மிக அருகாமையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இந்த வழியாகவே பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் செல்வர்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர்.       பிரதான சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கு இந்த டாஸ்மாக் கடையால் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் மிக அதிகம். எனவே இந்த கடையை மாற்ற வேண்டுமென மக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.        அண்மையில் மத நல்லிணக்க நிகழ்வுகளுக்கு குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்  எம் பி யும் இதே கோரிக்கை வலியுறுத்தி இருந்தார். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அருமணை டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.         எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும்  டாஸ்மாக் அதிகாரிகளும் உடனடியாக அந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டர்களை திரட்டி பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Next Story