தமிழக அரசின் பட்ஜெட் காணொளி காட்சி மூலம் பார்த்த பொதுமக்கள்

தமிழக அரசின் பட்ஜெட் காணொளி காட்சி மூலம் பார்த்த பொதுமக்கள்
X
தாராபுரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் காணொளி காட்சி மூலம் பார்த்த பொதுமக்கள்
தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசினார். இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் காண வேண்டும் என்பதற்காக தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அண்ணா சிலை அருகே பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அலங்கார பந்தல் அமைத்து காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பினர். நிகழ்ச்சியை தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்து பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story