தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆலோசனை கூட்டம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆலோசனை கூட்டம்.
X
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பரமத்தி வேலூர், மார்ச்.15: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றம் ஆலோசனைக் கூட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சங்கர்,மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 01.04.2026 முதல் விடுப்பூதியம் பெறலாம் எனும் நிதிநிலை அறிக்கை தெரிவிப்பு இலவுகாத்த கிளிகளாய் ஆசிரியர் அரசு ஊழியர்களை காத்திருக்கச் செய்கிறது. இவை மட்டுமின்றி 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செய்யப்பட்டுள்ள சரண்டர் விடுப்பூதியம் அறிவிப்பு ஆசிரியர்-அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்துவதாகும், சிறுமைப்படுத்துவதாகும். தமிழ்நாடு அரசின் இத்தகு தவறான செயல்பாடுகள் ஆசிரியர் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசின் மீது அதிருப்தி அடைய செய்கிறது. போராட்ட நடவடிக்கைகளுக்கு தள்ளிவிடுகிறது. தமிழ்நாடு அரசு ஆசிரியர் அரசு ஊழியர்களின் மீதான பாராமுகத்தை கைவிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோருதல் புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்தல், ஒன்றிய பணிமூப்பு பறித்து மாநில பணிமூப்பு திணிக்கும் அரசாணை எண்:243/ நாள்:21.12.2023 ஐ இரத்து செய்தல் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோவின் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 23.03.2025 (ஞாயிறு) அன்று நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெறும் ஒருநாள் அடையாள பட்டினிப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பது என்று இச்செயற்குழு முடிவாற்றுகிறது. பள்ளிப் பணி நேரம் அல்லாத நேரங்களில் பெண்ணாசிரியர்களை விசாரணை பள்ளிப்பார்வை மற்றும் பள்ளி ஆண்டாய்வு என்ற பெயரில் பள்ளிகளில் காத்திருக்கச் செய்வது மற்றும் கல்வித்துறை அலுவலகங்களுக்கு வாய்மொழியாக ஆணையிட்டு பெண்ணாசிரியர்களை வரவழைத்து மணிக்கணக்கில் அலுவலகங்களில் நிற்கவைப்பது விசாரணைக்காக காத்திருக்கச் செய்வது போன்ற மனித நாகரிகமற்ற செயல்பாடுகள் முற்றிலுமாக தடுத்து நிறுததப்படவேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் -அரசு ஊழியர் சங்கங்களின் இயக்கச் செயல்பாடுகள் மற்றும் போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில் அச்சுறுத்தும் வகையினில் நடத்தை விதிகள் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக உள்நோக்கத்துடன் தகவல்கள்-செய்திகள் கசியவிடப்படுவதற்கு வன்மையாக கண்டனம் இச்செயற்குழு தெரிவிக்கிறது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசியல் உரிமை வழங்கி இருப்பது போன்று ஆசிரியர் மற்றும் அரசு ஊழியருக்கும் அரசியல் பங்கேற்பு உரிமை மற்றும் வேலைநிறுத்த உரிமை வழங்கிட வேண்டும். தனிநபர் பொருளாதார வளர்ச்சி நிலையினை கணக்கில் கொண்டு தனிநபர் வருமான வரிவிலக்கினை ரூ 25 இலட்சமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். தேசியக்கல்வித்திட்டம் -2020, மூன்று மொழிக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கட்டாயப்படுத்துவதும், ஒன்றிய அரசின் கல்வி பங்கு நிதியை தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க மறுப்பதுமான ஒன்றியக்கல்வி அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு வன்மையாக கண்டனம் இச்செயற்குழு செய்கிறது. மத்திய அரசின் பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு மாநிலத்திற்கேற்ற தனித்துவமான மாநிலக்கல்விக் கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்திடல் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இடத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.
Next Story