தியாகராஜர் ஆலயத்தின் ஆழித்தேரட்ட கொடியேற்றும் நிகழ்ச்சி.

திருவாரூர் மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆலயத்தின் ஆடி தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
சர்வதேச பரிகார ஸ்தலங்களில் ஒன்றாக திகழும் திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது பால், சந்தனம், திராவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், பழச்சாறு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு ஆலயத்தின் முன் அமைந்துள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ரிஷப வாகனம் பொறிக்கப்பட்ட கொடியானது தியாகராஜ சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. ஆரூரா தியாகேசா என்ற பக்தி கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கொடியேற்ற நிகழ்வில் பங்கு பெற்றனர்.
Next Story