ஹீட்டரை பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கி இளம் பெண் பலி

X
மீஞ்சூர் அருகே கணவர் வேலைக்கு செல்வதற்காக காலையில் சுடு தண்ணீர் போடுவதற்கு சாதாரண ஹீட்டரை பயன்படுத்திய பொழுது மின்சாரம் தாக்கி இளம் பெண் பலி. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்தி வயது 33. மனைவியின் பெயர் அஸ்வினி வயது 32. கார்த்தி கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் காலையில் ஏழு மணி அளவில் வேலைக்கு செல்வது வழக்கம். அப்படி செல்லும் கார்த்திக்குக்கு அவரின் மனைவி அஸ்வினி காலையில் கணவர் குளிப்பதற்கு சுடு தண்ணீர் வைப்பது வழக்கம். அப்படி சுடுதண்ணீர் வைப்பதற்காக. வீட்டில் பயன்படுத்தப்படும் சாதாரண ஹீட்டரை பொருத்துவதற்காக அதில் நீண்ட ஒரு வயர் மூலமாக குளியலறை அருகே உள்ள இடத்தில் சுடு தண்ணீர் போடுவதற்காக அஸ்வினி ஹீட்டர் எடுத்து பொருத்தியுள்ளார் பின்பு மின்சாரம் வருகிறதா என்று பார்த்ததாக தெரிகிறது அப்பொழுது தற்செயலாக ஹீட்டர் அஸ்வின் மேல் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அஸ்வினி கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில் மின்சாரம் தாக்கி விழுந்து கிடந்த அஸ்வினியை அவரது கணவர் கார்த்தி மற்றும் உறவினர்கள் மீட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெண்ணின் கணவரும் அவரின் உறவினர்களும் அஸ்வினியின் தாயாரும் மருத்துவமனை அருகே ஒப்பாரி விட்டு அழுதது பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சாதாரண ஹீட்டர்களில் பலகாலங்களில் மின் கசிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தது தெரிந்த விஷயம். ஆதலால் இது போன்ற விலை குறைவான தரமற்ற பொருள்களை வாங்கி பயன்படுத்துவது பொதுமக்கள் தவிர்ப்பது சிறந்தது.
Next Story

