காதல் தம்பதியினரை பிரித்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்

காதல் தம்பதியினரை பிரித்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த கணேசன் - தமிழ் பிரியா தம்பதியரின் மகள் பூஜா. 21 வயது நிரம்பிய இவர் நர்சிங் படிப்பிற்காக வேலூர் கஸ்தம்பாடி முகாமில் உள்ள அவரது பெரியம்மா செல்வியின் வீட்டில் தங்கி படித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரிடம் காதல் வயபட்டுள்ளார். இருவரும் கடந்த 10 தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பூஜாவில் உறவினர்கள் அங்குள்ள களம்பூர் காவல் நிலையத்தில் இருவருக்கும் முறையாக திருமணம் செய்து வைப்பதாக கூறி சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்ற நிலையில் காவல் நிலையத்தை தாண்டி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்ட சரண்ராஜ் மற்றும் பூஜா ஆகியோரை அடித்து பூஜாவின் கழுத்தில் கட்டப்பட்ட தாலியை அறுத்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட பூஜா நேற்று சென்னை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இலங்கை தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பூஜாவின் தாலியை அறுத்து உயிர் இழப்பிற்கு காரணமான உறவினர்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழர்கள் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
Next Story