ஆபத்தான கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஆபத்தான கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
X
சேர்வைக்காரன்மடம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேர்வைக்காரன்மடம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி சேர்வைக்காரன்மடம் தேரி மெயின் ரோட்டின் வழியாக புதுமனை செல்லும் வழியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையிலும் கீழே விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் கீழே உடைந்து 4 கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டு உள்ளது. இந்த பகுதியில் பல குடியிருப்பு வீடுகள் உள்ளது. மேலும் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் புதுமனை பகுதி செல்ல இந்த வழியை உபயோகித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஆபத்தாக கீழே விழும் நிலையில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ள மேற்கண்ட மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story