புளியங்குடியில் வாஷிங் மெஷினில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

புளியங்குடியில் வாஷிங் மெஷினில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
X
வாஷிங் மெஷினில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடி வேதக்கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னகருப்பசாமி. வியாபாரி. அவரது மனைவி மாரியம்மாள் (60), வாஷிங் மெஷினில் துணி துவைத்தாராம். அப்போது, அவா் மீது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story