சேலம் இரும்பாலை அருகே பெண் மர்ம சாவு

X
சேலம் இரும்பாலை அருகே அரியா கவுண்டம்பட்டி கிட்டனுரைச் சேர்ந்தவர் வடிவேல் தறி தொழிலாளி. இவரது மனைவி பாப்பா இவர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பாப்பா பெற்றோர் வீட்டில் இரு மாதங்களாக இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் சமாதானம் பேசி வடிவேல் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாப்பா இறந்ததாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர் அளித்த புகார் படி இரும்பாலை போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Next Story

