குளூக்கோமா வாரத்தையொட்டி சேலத்தில் விழிப்புணர்வு மனித சங்கிலி

X
சேலம் தி ஐ பவுண்டேசன், கண் மருத்துவமனை, செயின்ட் போனி ஒயிட் நர்சிங் கல்லூரி மாணவிகள் இணைந்து உலக குளூக்கோஸ் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலியை நேற்று சேலத்தில் நடத்தின. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை டாக்டர் அஸ்வின் ஷெஹி ஆகியோர் மனித சங்கிலியை தொடங்கி வைத்தனர். தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைமை டாக்டர் அஸ்வின் ஷெஹி பேசுகையில், குளூக்கோமா என்ற நோய் பற்றி 90 சதவீதம் பேருக்கு தெரிவது இல்லை. எனவே இந்த நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமாக்கலாம். பொதுமக்களின் நலனுக்காக ஐ பவுண்டேசன் மருத்துவமனையில் மார்ச் மாதம் முழுவதும் இலவச கண்பரிசோதனை முகாம், ஆலோசனை வழங்கி வருகிறோம் என்றார். நிகழ்ச்சியில் கண் மருத்துவமனை விழித்திரை டாக்டர் சிவராஜ், டாக்டர்கள் ஆண்ட்ரியோ ஜோஸ், மேகநாயர், மேலாளர் செந்தில், விற்பனை மேலாளர் கோவிந்தசாமி, நர்சிங் கல்லூரி முதல்வர் சண்முகப்பிரியா மற்றும் கண் மருத்துவமனை அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

