ஆம்பூர் அருகே இரவு நேரங்களில் பாலாற்றில் திறந்து விடப்படும் தோல் கழிவுநீரால் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அருகே இரவு நேரங்களில் பாலாற்றில் திறந்து விடப்படும் தோல் கழிவுநீரால் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், இரவு நேரங்களில் பாலாற்றில் நேரடியாக திறந்து விடுவதால், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு அதிக அளவு துர்நாற்றத்துடன், நுரைப்பொங்கி ஓடுகிறது, இந்நிலையில் பாலாற்றில் தோல் கழிவுநீரை திறந்து விடக்கூடாது என பாலாற்று படுக்கையில் உள்ள விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் மீண்டும், மீண்டும், சில தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை பாலாற்றில் திறந்து விடுவதால் பாலாற்று படுக்கையில் நிலத்திடி நீர் மட்டம் குடிக்க முடியாத அளவிற்கு மாசடைந்து இருப்பதாகவும், மேலும் பகல் பொழுதில் தோல் கழிவுநீரை தேக்கி வைத்து இரவு நேரங்களில் தோல் கழிவுநீரை திறந்துவிடுவதாகவும், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர் மேலும் ஏற்கனவே பாலாறு நுரைப்பொங்கி ஓடுவதை தடுக்க விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியும் மீண்டும், மீண்டும் பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பது விவசாயிகளை மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளது...
Next Story



