சந்தன மரம் வெட்டிக் கடத்தியவர் கைது

X
குமரி மாவட்டம் தேங்கா பட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்ல ஜோணி (48). இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இவர் சுனைக்கரைக் காடு என்ற பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் சந்தண மரம் நட்டு வளர்த்து வந்தார். நேற்று காலை செல்ல ஜோனி தனது தோட்டத்துக்கு செல்லும் போது மர்ம நபர் ஒருவர் தோட்டத்தில் நின்ற சந்தண மரம் ஒன்றை வெட்டி முறித்து சாக்கு பையில் அடைத்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை பிடித்து புதுக்கடை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், பிடிபட்டவர் வேர்க்கிளம்பி பகுதி ரெவி (65) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான சந்தன மரத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story

