விவசாயிகளுக்கு தனி அடையாள எண்

X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்ய மார்ச் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆதார் எண் போன்ற அடையாள எண் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசின் அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும். இந்த அடையாள எண்கள் வழங்கும் முகாம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேளாண் துறை அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் நகல், நில ஆவணங்கள் நகல்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையம் மற்றும் கிராமங்களில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு செய்ய வரும் 31ம் தேதி இறுதி நாள் ஆகும். எனவே அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story

