ஈ.கோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும், வாணியம்பாடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி.

X
திருப்பத்தூர் மாவட்டம் ஈ.கோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும், வாணியம்பாடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியிற்கு வருகை தந்த ஓ.பன்னீர் செல்வம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது, டாஸ்மாகிலிருந்து வரிகட்டிய மதுபானங்கள், பெறுவது தான் அரசின் நடவடிக்கையாக இருந்தது, வரிகட்டாத டாஸ்மாக் மதுபானங்கள் இன்றைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வருவது மூலமாக அமலாக்த்துறையின் போது கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு முறைகேடு நடைப்பெறுவதாக செய்திகள் வருகிறது, அரசுக்கு வரவேண்டிய நியாயமான வரிகள், மறுக்கப்பட்டு,வேறு இடங்களுக்கு அந்த வரிகள் செல்வதனால், தமிழ்நாடு அரசின் வருவாய் இழப்பு 1000 கோடி என்ற செய்தி வந்துகொண்டு இருக்கின்றது, அதனை தடுக்கும் பொறுப்பு திமுக அரசுக்கு இருக்கின்றது.. அதிமுக கழகம் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட சட்டவிதிகளை வரையறுத்தார்கள், அதை தான் அம்மாவும் கடைபிடித்தார்கள், அப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க கழகத்தை, மாநிலத்தின் வருவாயை கொண்டு 52 % மக்கள் பணிகளை செய்தவர் அம்மா, அப்படி பட்ட அதிமுக இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக அதிமுக சக்திகள், தொண்டர்களின் சக்தி, இன்றைக்கு, அந்த சக்தி பிரிந்து கிடக்கின்றது, பிரிந்த அதிமுக ஒன்றிணைந்து, எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் உருவாக்கினார்களோ,அம்மாவின் ஆட்சி 2026ல் வர வேண்டும் என்றால், பிரிந்த சக்திகள் ஒன்றிணைக்க வேண்டும், அதுதான் அதிமுக தொண்டர்களின் கருத்து, அவரவர் மனதில் உள்ள ஈகோவை உதறிதள்ளிவிட்டு, தலைவர் காட்டிய வழியில் செல்ல ஈகோ பிடித்த தலைவர்கள் ஈகோவை விட்டுகொடுத்து கழக நலனுக்காக செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து 2026ல் அதிமுக ஆட்சி மலரசெய்ய வேண்டும் என பேட்டியளித்தார்..
Next Story

