சின்னமனூர் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில் விற்றவர் கைது

X
சின்னமனூர் போலீசார் நேற்று (மார்.15) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள செங்குளம் கண்மாய் பகுதியில் முனியாண்டி என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் முனியாண்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

