பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது

X
தேவாரம் காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.15) குற்றத்தடுப்பு சம்பந்தப்பட்ட ரோந்து பணி மேற்கொண்டனர். தேவாரம் செல்லாயிபுரம் பகுதியில் உள்ள கணேசன் என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காக கடையில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கணேசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

