கோம்பையில் புகையிலை விற்ற முதியவர் கைது

X
கோம்பை காவல் நிலைய போலீசார் நேற்று (மார்.15) சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனை சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். கோம்பை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ராமன் (68) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்ட பொழுது அவரது கடையில் விற்பனைக்காக சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ராமன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

