தோவாளையில் கால்வாயில் பாய்ந்த பைக் ஒருவர் பலி

தோவாளையில் கால்வாயில் பாய்ந்த பைக் ஒருவர் பலி
X
ஆரல்வாய்மொழி
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செல்லும் பாதையில்  தோவாளை கால்வாய் மறுகால் ஓடை உள்ளது. நேற்று  பைக்குடன் வாலிபர்  ஒருவர் ஓடையில் விழுந்து கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.        108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்து பார்த்தபோது அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் சடலத்தை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.        விசாரணையில் இறந்து கிடந்தவர் கன்னியாகுமரி அருகே அகஸ்தியர் கோவில் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் அஜித்தன் (30) என்பதும், நாகர்கோவில் அப்டா  மார்க்கெட் அருகில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது. நேற்று அவர் பைக்கில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம்  மோதி பைக்குடன் ஓடையில் விழுந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை பிறகு என்ன நடந்தது என தெரியவரும். போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
Next Story