அகஸ்தீஸ்வரம் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு

X

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பெருமாள்புரம், அஞ்சுகிராமம், அழகப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- பெருமாள்புரம் இலங்கைவாழ் தமிழர் முகாமில் ரூ.7.5 கோடி மதிப்பில் 90 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டப்படவுள்ளது. தற்போது அடித்தள பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவில் முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அஞ்சுகிராமம், அழகப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நேரில் பார்வையிட்டதோடு, பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. இவ்வாறு கூறினார். நடைபெற்ற ஆய்வுகளில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியர் பிளாரன்ஸ் நிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலபால கிருஷ்ணன், உதவிப்பொறியாளர் (ஊ.வ) சி.ரெஜன், கள அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story