ஊத்தங்கரை: மறைந்த திமுக முன்னாள் நகர கழக செயலாளார் படத்திறப்பு விழா.

X

ஊத்தங்கரை: மறைந்த திமுக முன்னாள் நகர கழக செயலாளார் படத்திறப்பு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் பேரூராட்சி தலைவரும் நகர கழக செயலாளருமான பாபு சிவகுமாரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் வித்யாமந்திரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகரன், அதியமான் கல்வி நிறுவனத்தின் தாளாளர் திருமால் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பாபு சிவகுமாரின் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பாபு சிவகுமாரின் நினைவாக நல திட்ட உதவிகள் வழங்கினர்.
Next Story