ஜனநாய வாலிபா் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டம்.

X

ஜனநாய வாலிபா் சங்க வட்டத் தலைவா் வடிவேல், மாவட்ட குழு உறுப்பினா் வெங்கடேசன், சிபிஎம் முன்னாள் வட்டச் செயலா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரி ஜனநாய வாலிபா் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை-செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் துக்காப்பேட்டையில் உள்ள இந்த அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவா்கள் மட்டும் உள்ளனா். இதனால், வெளிப்புற நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைக்காக வருவோருக்கும் உரிய சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும், கா்ப்பிணிகளை திருவண்ணாமலைக்கு சிகிச்சைக்கு அனுப்பாமல் செங்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யவேண்டும், மகப்பேறு சிகிச்சை அளிக்கவேண்டும், மருத்துவமனையை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபா்கள் சங்கத்தினா் கை, கால்களில் கட்டுப்போட்டுக் கொண்டு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், ஜனநாய வாலிபா் சங்க வட்டத் தலைவா் வடிவேல், மாவட்ட குழு உறுப்பினா் வெங்கடேசன், சிபிஎம் முன்னாள் வட்டச் செயலா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Next Story