அவலூர்பேட்டை அருகே சாலை விபத்தில் கணவன் இறப்பு

அவலூர்பேட்டை அருகே சாலை விபத்தில் கணவன் இறப்பு
X
மனைவி படுகாயம் போலீசார் விசாரணை
அவலுார்பேட்டை அடுத்த சுந்தரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பன், 55; இவரது மனைவி மணியம்மாள். நேற்று முன்தினம் மாலை 6:50 மணிக்கு இருவரும் டி.வி.எஸ்., எக்செல் மொபட்டில் அவலுார்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது குந்தலம்பட்டு ஏரி அருகே வந்த போது, சேத்பட் சாலையிலிருந்து பின்னால் வந்த ஸ்பிளண்டர் பிளஸ் பைக், மொபட்டின் மீது மோதியது. இதில் வேம்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மணியம்மாள், 50; திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story