இண்டூரில் வீர மங்கை விருது வழங்கும் விழா

இண்டூரில் அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு வீர மங்கை விருது வழங்கும் விழா நடந்தது.
தருமபுரி மாவட்டம் இண்டூர் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் இணைந்த கரங்கள் அமைப்பின் மூலம் பல்வேறு துறைகளில் சிறந்து விழங்கும் 50 பெண்களுக்கு வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருதம் நெல்லி குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் தலைமை ஏற்று விருதுகளை வழங்கினார். இணைந்த கரங்கள் அமைப்பின் நிறுவனர் சிலம்பரசன் சிறப்புரை வழங்கினார். மாவட்ட செவிலியர் சங்க தலைவி ராஜேஸ்வரி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் உலகநாதன், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளார் கிருஷ்ணமூர்த்தி, நற்சுவை .கீதா சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் 100 மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story