விசிக சார்பில் முகாம் செயற்குழு கூட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கரூர் கிழக்கு மாவட்டம், தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி, பில்லூர் காலனியில் முகாம் செயற்குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. முகாம் செயலாளர் அசோக்ராஜ் தலைமை வகித்தார். நவீஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் கலைவாணன் நோக்க உரை ஆற்றினார். மாவட்டத் துணை அமைப்பாளர் ராமன் விளக்க உரையாற்றினார். மாவட்டத் துணை அமைப்பாளர் துரை (எ) ஆறுமுகம் , ஒன்றிய துணை அமைப்பாளர் சரத்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்றிய அமைப்பாளர் மணிவளவன் (எ) ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். விழா முடிவில் சிவ கணேஷ் நன்றி உரையாற்றினார். இதில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முனியப்பன், மதிவாணன் உட்பட முகாம் உறுப்பினர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story