சேலம் டாஸ்மாக் அலுவலகம் முன்பு பா.ஜனதா இன்று முற்றுகை போராட்டம்

சேலம் டாஸ்மாக் அலுவலகம் முன்பு பா.ஜனதா இன்று முற்றுகை போராட்டம்
X
மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி
பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- டாஸ்மாக் நிறுவனம் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்திருக்கிறது. இதில் அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தப்ப முடியாது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக டாஸ்மாக்கில் ஊழல் செய்த பணம் தமிழகம் முழுவதும் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஊழலுக்கு எதிராக பா.ஜனதா கட்சி சார்பில் இன்று (திங்கட்கிழமை) டாஸ்மாக் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு என பல்வேறு நாடகங்களை தி.மு.க. நடத்தி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமர், மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story