கண்டமங்கலம் அருகே எலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் இறப்பு

கண்டமங்கலம் அருகே எலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் இறப்பு
X
கண்டமங்கலம் போலிசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், கோண்டூா் இந்திராநகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சச்சின் (18). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள சச்சின், தினமும் கைப்பேசியில் விளையாடுவாராம். கடந்த 8-ஆம் தேதி சச்சின் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததை கண்ட அவரது தந்தை, கைப்பேசியை பிடுங்கினாராம்.இதனால் கோபமடைந்த சச்சின் வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை தின்று மயங்கிக் கிடந்துள்ளாா். புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், பின்னா் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சச்சின் உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story