சோளிங்கரில் குடிநீர் தட்டுப்பாடு!

X
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பில்லாஞ்சிப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு பொன்னை ஆற்று நீர் பைப்லைன் மூலம் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பில்லாஞ்சி தனியார் திருமண மண்டபம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த 2 நாட்களாக குடிநீர் இல்லாமல் பில்லாஞ்சி பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த 5-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஆஞ்சநேயன் தனது சொந்த பணத்தில் டிராக்டர் மூலம் குடிநீர் கொண்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார். இதன் மூலம் பொதுமக்கள் குடிநீர் பெற்று பயனடைந்தனர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் ஆஞ்ச நேயனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Next Story

