ராணிப்பேட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

X

ராணிப்பேட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட் சிகளிலும் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் தவறாமல் கூட்டப்பட வேண்டும். கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொ ருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம் செயல் திட்டம், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் குறித்து தெரிவித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டும். கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story