நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொளுத்துவதால் மூச்சு திணறல், சுவாசக் கோளாறால் மக்கள் அவதி

நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொளுத்துவதால் மூச்சு திணறல், சுவாசக் கோளாறு
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் நகராட்சிக்கு உட்பட்ட தலக்காஞ்சேரி பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் டன்னுக்கு மேலாக குப்பை கழிவுகள் குவிந்திருக்கும் நிலையில், அந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று நகராட்சி தரம் பிரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.அதே போன்று கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரிக்காமல் இருக்கும் நிலையில் மேலும் மருத்துவ கழிவுகளையும் குப்பைகளையும் கொண்டுவந்து கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இவற்றை தடுக்க வேண்டும். அடிக்கடி குப்பைகளை கொளுத்துவதால் மூச்சு திணறல், சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்’ என்றனர்.
Next Story