டாஸ்மாக் முற்றுகை போராட்டம் எதிரொலி: வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பாஜகவின் தமிழிசை, வினோஜ் பி. செல்வம்

X

டாஸ்மாக் முற்றுகை போராட்டம் எதிரொலி காரணமாக தமிழிசை, வினோஜ் பி.செல்வம் உட்பட பாஜக முக்கியத் தலைவர்கள் தமிழகம் முழுவதும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக இன்று மார்ச் 17ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டின் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பாஜக முக்கியத் தலைவரான தமிழிசை அவர்களது சாலிகிராமம் இல்லம் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ராஜரத்தினம் மைதானம், தாளமுத்து நடராஜர் மாளிகை, டாஸ்மாக் தலைமை அலுவலகம், பாஜக முக்கியத் தலைவர்களின் வீடு என அனைத்து இடங்களிலும் சுமார் 500 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் போராட்டத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story