சங்கரன்கோவில் இன்றைய காய்கறி விலை விவரம்

X

இன்றைய காய்கறி விலை விவரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உழவர் சந்தை விலை அடிப்படையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் பின்வருமாறு:- ஒரு கிலோ கத்தரிக்காய் குறைந்த பட்சம் 10 ரூபாய் முதல், அதிகபட்சம் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ நாட்டுத்தக்காளி குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும், ஆப்பிள் தக்காளி 8ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும், புடலங்காய் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும், பீர்க்கங்காய் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், சுரைக்காய் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ பூசணிக்காய் குறைந்தபட்சம் 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் 20ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் தேங்காய் ஒன்று 55 ரூபாய் முதல் 60ரூபாய் வரையிலும், சேனைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Next Story