முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம்
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிர் மாறாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி கொண்டிருக்கிறார் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பேச்சு மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராகுங்கள் மோடி அவர்களே தமிழர்களிடம் உங்கள் வேலையை காட்டாதீர்கள் என சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் பேச்சு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மாநில வர்த்தக அணி சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்னேரி பஜார் வீதியில் பொது கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா மற்றும் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர் பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசுகையில் பாஜக மத்திய அரசு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊடுருவி மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டனர் அந்த காலத்தில் படையெடுப்பிற்கு வந்தவர்கள் நாட்டிற்குள் புகுந்து எப்படி சூறை ஆடுவார்களோ அதைப்போல பல மாநிலங்களில் வடக்கில் நேரடியாகவும் மறைமுகமாக திருப்பங்களை ஏற்படுத்தி சாதகமான சூழல்களை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றனர் எதிர் கட்சிகள் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றுவது என வடக்கில் எல்லா மாநிலங்களையும் தங்களிடத்தில் கொண்டு வந்து விட்டார்கள் இந்த நிலையில் எந்த காலத்திலும் இவர்களுடைய சூழ்ச்சிக்கோ வஞ்சனைக்ககோ வணங்காது நிமிர்ந்து நிற்கக்கூடிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் கருப்பு சிவப்பு கொடிபறந்து கொண்டிருப்பதுதான் என்றும் திமுகவின் திட்டங்களை பின்பற்றி தான் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றினார்கள் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை எல்லோராலும் பாராட்டப்படுகிற நிதிநிலை அறிக்கையாக உள்ளது என்றும் உத்தரபிரதேசத்தில் 27,500 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் படிக்கின்ற இந்தியை நம்மை படிக்க சொல்கிறது மத்திய அரசாங்கம் என்றும் அங்கு கல்விக்கூடங்கள் மட்டும் மூடப்படவில்லை பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய ஏழு லட்சம் மாணவர்கள் இந்தியில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர் என்றும் தென் மாநிலங்களில் இந்தியை பிரச்சாரம் செய்யும் தலைமையகம் சென்னையில் தான் அமைந்துள்ளது லட்சக்கணக்கானவர்கள் அங்கு சென்று இந்தி தேர்ச்சி பெறுகின்றனர் நாங்கள் எந்த மொழியையும் வெறுப்பவர்கள் அல்ல எங்கள் மீது மொழியை திணிக்காதீர்கள் எங்களுக்கு இந்தி தேவை இல்லை என்றும் ரூபாய் என முதல்வர் ஆரம்பித்து வைத்தார் அது இந்தியா முழுவதும் பேசும் பொருள் ஆகிவிட்டது என்றும் தமிழக அரசுக்கு பள்ளிக் கல்விக்கு தரவேண்டிய 2500 கோடியை மத்திய அரசு தர மறுக்கிறது முதலமைச்சரைப் பார்த்து வாய்க்கொழுப்பு என்றெல்லாம் பாஜக அண்ணாமலை பேசுகிறார் மூன்று நான்கு ஐந்து மொழி கூட படித்துக் கொள்ளலாம் ஆனால் நாங்கள் அரசாங்க ரீதியாக இரு மொழி கொள்கையை மட்டுமே ஏற்றுக் கொள்கிறோம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிர்மாறாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருக்கிறார் என திருச்சி சிவா பேசிக் கொண்டிருந்தபோது கட்சியினர் இடையே பேசியதால் திடீரென பேச்சை நிறுத்தி என்ன பேசுகிறீர்கள் என அங்கிருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினார் பின்னர் அமைச்சர் சாமு நாசர் பேசிக்கொண்டிருந்த போது கட்சி பிரமுகர் ஒருவர் செல்போன் பேசியதால் தம்பி தம்பி அப்படி போய் போன் பண்ணு இது போன்ற ஒன்னு ரெண்டு கொசு தொல்லைகள் வருது என கட்சிக்காரரை பேசிய அவர் கஜானா காலி களஞ்சியம் காலி அதனை சரி செய்து சிறந்த நிதிநிலை அறிக்கையை தயார் செய்து வழங்கியுள்ளதாகவும் நம்மை எப்படி வீழ்த்த வேண்டும் உதாசீனப்படுத்த வேண்டும் என பல கோணத்தில் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும் மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவான மாநிலங்களுக்கு அள்ளித் தருகிறார்கள் அள்ளித் தருகின்ற பிரதமராக மோடி செயல்படுகிறார் பாராளுமன்றத்தில் அண்ணா பேசிய தனிநாடு கொள்கை மீண்டும் தமிழக மக்களிடம் எழுந்து வரும் நிலையை உருவாகக் கூடாது என்பதற்காகத்தான் பொதுக்கூட்டம் நடத்தி தமிழக முதல்வர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்றும் இதை மற்ற மாநில முதல்வர்களும் ஏற்று வருகின்றனர் என்றும் மோடி அவர்களே தமிழர்களிடம் உங்கள் வேலையை காட்டாதீர்கள் மொழியை காக்க முதல்வர் என்ன சொன்னாலும் உயிர் தியாகம் செய்து மொழியை காக்க தயாராவோம் மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தயாராகுங்கள் என அமைச்சர் சாமு நாசர் தெரிவித்தார்..
Next Story





