திருவள்ளூர் புத்தகத் திருவிழா திண்டுக்கல் லியோனி பங்கேற்பு
திருவள்ளூரில் நான்காவது ஆண்டாக நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ லியோனி தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் வாழ்வுக்கு மகிழ்வோடு வழி காட்டுவது எழுத்து என்று புத்தகங்களின் அவசியத்தை எடுத்துரைத்து முதல்வர் 20 ஆண்டுகளில் 11 லட்சம் புத்தகங்களை பரிசாக பெற்று 5 நூலகங்களை அமைத்து உள்ளதை பாராட்டினார் திருவள்ளூரில் நடைபெற்று வரும் நான்காம் ஆண்டு புத்தகக் கண்காட்சியின் பத்தாம் நாளில் பட்டி மன்ற பேச்சாளர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி தலைமையில் வாழ்வுக்கு மகிழ்வோடு வழிகாட்டுவது எழுத்தா? என்ற தலைப்பில் பேராசிரியர் மா விஜயகுமார். பேச்சா? என்ற தலைப்பில் முனைவர் வேதநாயகி. பாட்டா? என்ற தலைப்பில் தேவகோட்டை ராஜன். நடிப்பா என்ற தலைப்பில் கலைஞர் இனியவன் ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் சிந்தனை அரங்கில் நடைபெற்றது இதில் பேசிய பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ லியோனி திருவள்ளுவர் இசையால் திருக்குறளை சொல்லவில்லை என்றும் நடித்து பேசி சொல்லவில்லை என்றும் எழுத்தால் எழுதியதால் தான் இன்றும் திருக்குறள் நம்மோடு வாழ்கிறது என்று தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்தியாவிலேயே முதல் அச்சகம் தரங்கம்பாடியில் சீகன் பால்கு ஐயர் என்பவரால் தம்பிரான் வணக்கம் என்ற தமிழ் மொழி புத்தகம் அச்சிடப்பட்டது என்றும் அத்தகைய பெருமைக்கு உரியது தமிழ் மொழி என்றார் குஜராத்தி ஹிந்தி போன்ற இந்திய மொழிகளுக்கு இல்லாத பெருமை எழுத்து வடிவில் வந்த முதல் மொழி தமிழ் மொழி தான் என்றதுடன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பானைகளில் எழுத்துருக்களை கண்டறிந்துள்ளனர் அப்படி எனில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் படிக்கத் தெரிந்த பெண் சமூகம் இருந்தது. தமிழ் சமூகம் என்றும் எழுதப் படிக்கத் தெரிந்த சமூகமாக இருந்திருக்கிறது என பெருமையுடன் தெரிவித்தார். பேச்சு கைதட்ட வைக்கும். பாடல் உணர்ச்சி வசப்படுத்தும். நடிப்பு அதைவிட உணர்ச்சிவயம் ஆக்கும். இவை அத்தனையையும் விட சிறப்பானது எழுத்து ஏனெனில் அடுத்த தலைமுறைக்கு நம்மை கொண்டு செல்ல வேண்டும் அவை அனைத்தும் செய்யும் எழுத்துதான் எனக் கூறியதுடன் எழுத்து வடிவில் புத்தகமாக சென்றால் தான் அது நிரந்தரமாக இருக்கும் என்றார். புத்தகம் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக நம்மோடு இருக்கும் என தெரிவித்ததுடன் இந்தியாவிலேயே தனக்கு வழங்கும் சால்வை மாலைகளுக்கு பதிலாக புத்தகத்தை பரிசளியுங்கள் என்று கேட்ட ஒரே முதல்வர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என்றும், தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் 20 ஆண்டுகளில் 11 லட்சம் புத்தகங்களை பரிசாக பெற்று அதை 5 நூலகங்களாக அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. வாழ்வில் மகிழ்வித்து வழிகாட்டுவது புத்தகங்கள் என்பதற்கு சான்று பேச்சு ,பாட்டு, நடிப்பை விட எழுத்துதான் நம்மை வாழவைக்கும் எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்று பேசி புத்தக விழாவில் பங்கேற்ற அனைவரின் சிந்தனையும் தூண்டினார். முன்னதாக பேசிய சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு கவிஞர் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், திராவிட இயக்கம் தான் தமிழை வளர்த்தது என்றும் தேவநாகரி மொழியில் ₹ரூபாய் எழுத்து ரூ என தமிழில் தற்போது எழுதுவது பிரிவினைவாதிகள் என்று தமிழர்களை முத்திரை குத்துகின்றனர் நீங்கள் எங்கள் மொழி பண்பாட்டைசீண்டினால் தமிழ் மொழியில் கை வைத்தால் இதை தான் செய்ய வேண்டும். தமிழ் மொழி செம்மையான வலிமையான மொழி என்றும் மூவாயிரம் கால வளமை செம்மை இலக்கியங்களைக் கொண்டது என்று பேசிய அவர் எங்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்றார். 40 லட்சம் வட இந்தியர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் இதுவரை ஒருவரையும் அடித்தது கிடையாது என்றும் இந்தியா முழுவதும் தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்த அவர் நாங்கள் மூன்று மொழி அல்ல பத்து மொழிகளை கூட தேவைப்பட்டால் கற்றுக் கொள்கிறோம். 123 நாடுகளில் தமிழர்கள் உள்ளனர் இந்தியை படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பிய அவர் உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை ஆங்கிலத்தை வைத்து தமிழன் இன்று உலகை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்றார். தேசியம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தவிர இந்தியில் அல்ல என்றார்.
Next Story






