தொழில் வரி கட்டாத நிறுவனங்களுக்கு சீல் வைப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

தொழில் வரி கட்டாத நிறுவனங்களுக்கு சீல் வைப்பு நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் செய்து வரும் வணிக நிறுவனங்களுக்கு தொழில்வரி விதிப்பது வழக்கம் ஒரு சில தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் தொழில் வரியை கட்டி வந்த நிலையில் மத்திய அரசு கட்டாயமாக தொழில் வரியை வசூலிக்க வேண்டும் என நகராட்சிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது 2024 25 நிதியாண்டுக்கான தொழில்வரி கடுமையாக உயர்ந்துள்ளது பழைய வரிகள் கட்டாமல் நிலுவையில் இருந்தால் தொழில் உரிமத்தை புதுப்பிக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது அதிகமாக வரி நிலுவையில் உள்ள வணிக நிறுவனங்கள் கடைகள் உணவகங்கள் என இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது சுகாதார அலுவலர் வெங்கடாஜலம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் தனியார் உணவகத்தில் முறையாக உரிமம் புதுப்பிக்க வில்லை என உணவகத்தை சீல் வைத்தனர் இதே போன்று சீதாராம் பாளையம் பகுதியில் இயங்கி வரும் எலக்ட்ரிக்கல் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர் பட்டறை மேடு பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரி நிலுவை அதிகமாக உள்ள கடைகளையும் வணிக நிறுவனங்களையும் உணவகங்களையும் நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story