உதகையில் மின்னொளியில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டி

முதன்முறையாக நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவை அணியை வீழ்த்தி சேலம் அணி வெற்றி
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் முக்கோணம் கால்பந்து மைதானத்தில் காந்தல் கால்பந்து அகடாமி சார்பில் 8ம் ஆண்டாக மின்னொளியில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 32 ஆண்கள் அணியும், முதன்முறையாக நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் 18 அணிகளும் கலந்து கொண்டன இப்போட்டிகளின் இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியில் தஞ்சாவூர் மற்றும் திருச்சி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பல பரிச்சை நடத்தின. இறுதிப் போட்டியில் தஞ்சாவூர் மற்றும் திருச்சி அணிகள் தலா 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனை தொடர்ந்து பெனால்டி சூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் திருச்சி அணியை வீழ்த்தி தஞ்சாவூர் அணி கோப்பையை தட்டிச் சென்றது. அதேபோல் முதன்முறையாக நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் சேலம், கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் கோவை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சேலம் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட T3 காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசீலன் வெற்றி பெற்ற தஞ்சாவூர் ஆண்கள் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன, அதேபோல் இரண்டாம் இடம் பிடித்த திருச்சி ஆண்கள் அணிக்கு 52 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கி கௌரவித்தார். அதேபோல் வெற்றி பெற்ற சேலம் பெண்கள் அணிக்கு 30 ஆயிரம் ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன. அதேபோல் இரண்டாம் இடம் பிடித்த கோவை பெண்கள் அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன. கடும் குளிரில் மின்னொளியில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியை ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
Next Story